பரமத்திவேலூரில் ஆடிபெருக்கை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வினோத வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஆடிபெருக்கை முன்னிட்டு அதிகாலை முதலே காவிரியாற்றில் முளைப்பாரி விடுதல், திருமண வரம் வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து கொள்ளுதல், புதுமண தம்பதியர் மஞ்சள் கயிற்றை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பொதுமக்கள் தங்களின் குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கோவில்களில் உள்ள வேல், கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காவிரியாற்றுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கரகம் பாலித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் தலையில் தேங்காய்களை உடைத்து வினோத வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
Discussion about this post