தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இளநீர் வியாபாரி ஒருவர் ஸ்ட்ராவுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர் மூலம் இளநீர் விற்று வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார்.
தமிழக அரசு விதித்த பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் வைத்திருப்போர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் தடைக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மாற்று பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி முருகேசன் என்பவர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக கண்ணாடி டம்ளரில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவரது முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Discussion about this post