திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்…
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொப்பரை தேங்காயின் விலை கடுமையாக சரிந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சாதாரண கொப்பரை தேங்காய் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 98 ரூபாய்க்கு விற்பனையவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தேங்காய் சீசன் ஜூன் மாதம் தான் தொடங்கும் என்பதால் வரும் மே மாதம் வரை விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post