சர்வதேசக் கடற்கரை தூய்மைப்படுத்தும் நாளையொட்டி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேசக் கடலோரத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் கடலோரக் காவல் படை, இந்திய சுற்றுலா அமைச்சகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
இதில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு தூய்மைப் பணி செய்ததுடன், விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி. பரமேஷ் கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை எனத் தெரிவித்தார்.
Discussion about this post