நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்க உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது.
இதில் மேற்கு வங்கத்தில் இரண்டு பிரிவுகளை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. 6 பேருக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post