மணப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது,
” தகவல் தொழில் நுட்பம், வேளாண் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. தொழில்துறை நிறுவனங்கள், சென்னையில் தொழில் தொடங்க விரும்புகின்றன.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில் முதலீட்டை அதிகரிக்க, வரும் ஜனவரியில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பை பெறும் வகையில், மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இலவச வைஃபை வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 5 இடங்களில் வைஃபை வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான, வலிமையான ஆட்சி நடைபெறுவதால் சாதனைகள் படைக்கப்படுகின்றன.” இவ்வாறு இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார்.
மேலும், அவர் பேசியதாவது, 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிஐஐ உறுதுணையாக இருந்தது, வருகிற 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிஐஐ உறுதுணையாக இருந்து வருகிறது.
மாநிலத்தின் ஜிடிபியில் தகவல் தொழல்நுட்பம் உள்ளடக்கிய சேவைத்துறையின் பங்கு 7.9% உள்ளது. சென்னை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என அழைக்கப்படும் வகையில் வளர்ந்து வருகிறது.
தற்போது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் அரசின் அனைத்து சேவைகளும் கிராமங்களை சென்று சேரும் வகையில் பாரத் நெட் உதவியுடன் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தபட உள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் ஒப்புதல்களை பெறும் வகையில் வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வருகிற 2019 ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உயரும் என உறுதியாக நம்புகிறேன். தமிழகம் அமைதி பூங்காவகா திகழ்கிறது.
ஆய்வு ஒன்றில் தொழில் வளர்ச்சியில் டெல்லிக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்ற முடிவு வெளியாகி உள்ளது. தொழில்துறையில் மட்டுமல்ல மற்ற துறைகளில் சாதனைகளை படைப்போம்.
ஆற்று மணலுக்கு மாறாக வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து
எண்ணூர் துறைமுகத்திற்கு முதல் கப்பல் வந்து வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார மூலம் மூன்றாம் பொருளாதார புரட்சி ஏற்படும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று சொல்லும் வகையில் தமிழகம் செயல்படுகிறது என்றும் 2018-19 ஆண்டு இறுதியில் மென்பொருள் ஏற்றுமதி 1 லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடியாகவும், மென்பொறியாளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post