விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பேட்டையில் நாடாளுமன்ற வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர், மேகேதாதுவில் அணை கட்டவும், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைக்கவும் வாக்குறுதி அளித்து வரும் ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மீத்தேன் விவகாரத்தில் மு.க. ஸ்டாலினை துரோகி என விமர்சித்த வைகோ, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனக் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அதிமுக அரசு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். சூளை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், 50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் காவிரி முறைபடுத்தும் குழுவையும் அமைத்தது அதிமுக அரசு என்று கூறினார்.