இங்கிலாந்து, அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, துபாய் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்ற முதலமைச்சர், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்பிறகு அமெரிக்கா சென்ற முதலமைச்சர் நியூயார்க் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டங்களில் பங்கேற்று 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் வரை முதலீடுகள் கிடைத்துள்ளதோடு, 26 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்.
Discussion about this post