குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைதியாக உள்ள தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி குழப்பதை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இரட்டைக் குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
Discussion about this post