திமுக – அமமுக கூட்டணி அம்பலத்திற்கு வந்துள்ளது: முதலமைச்சர்

திமுக – அமமுக கூட்டணி அம்பலத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூறினார்.

திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் இடம் பிடித்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர், ஜூன் மாதம் 10 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றார். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version