கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் நரேந்திரமோதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு முறை பயணமாக சென்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக நலன் மற்றும் மக்கள் நலன் மேம்பாட்டிற்காக முக்கிய அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை அப்போது பிரதமரிடம் வழங்கினார்.
காவிரி பிரச்னை தொடர்பாக, நமது தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் அளித்த கோரிக்கையில் அடங்கியுள்ள அம்சங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதில் காவிரி பிரச்னை தொடர்பாக பல முக்கியமான கோரிக்கைகள், புள்ளி விபரத்தோடு, வழங்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் உரிமை பாதிக்கப்படும் வகையில் மேகதாது அணை கட்டப்படும் என தொடர்ந்து கர்நாடக அரசு கூறி வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என பிரதமரிடம் முதலமைச்சர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ரூ. 17,600 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு உரிய அனுமதியும் நிதியும் வழங்க வேண்டுமென்றும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post