கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை புறப்பட்டுச் சென்றார்.
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த, கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ள முதலமைச்சர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.
Discussion about this post