செய்தியாளர் பிரசன்னா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னையில் தீ விபத்தில் செய்தியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்த பிரசன்னா, தாம்பரம் அடுத்த சேலையூரில் தனது மனைவி அர்ச்சனா, தாயார் ரேவதி ஆகியோருடன வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் ஏற்பட்ட விபத்தில் பிரசன்னா, அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோர் கடந்த 27 ஆம் தேதி உயிரிழந்தனர்.

செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்தவர்களை இழந்துவாழும் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிரசன்னாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version