உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக, 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 2 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மலைப்பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், கார்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மாவட்டத்தில் உள்ள சிறிய பாலங்கள், சாலைகள் ஆகியவை மண்ணில் புதைந்தன. மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Discussion about this post