இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 5 லட்சம் வாக்குகள் பின் தங்கியுள்ள சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையில், அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தம் 81 புள்ளி 52 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் அதிபர் மகேந்திர ராஜபக்சவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சவுக்கும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்து வருவதால், சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையின் புதிய அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு பாராட்டுக்கள் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இந்த வெற்றியை தொண்டர்கள் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என இலங்கை பொதுஜன கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post