மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மக்களவை, மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 29 ஆம் தேதி வேட்பாளர்கள் தங்களது மனுவை திரும்பப் பெற கடைசிநாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Discussion about this post