மண்பானை விற்பனை அதிகரித்துள்ளதால் நல்ல லாபம் கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், மண்பானை விற்பனை தற்போது அதிகளவில் நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மண்பானைகளை உபயோகிக்க தொடங்கியுள்ளனர். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மண்பாண்டங்கள், விலை குறைந்து காணப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், மண்பாண்டங்களை உபயோகிப்பதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்பதாலும், பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால், விற்பனை நன்றாக உள்ளதாகவும், நல்ல லாபம் கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post