குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்துக் கொல்கத்தாவில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதேபோலக் கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் இந்தச் சட்டத்தைத் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன. இந்நிலையில் மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக சார்பில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் பேரணி நடைபெற்றது. கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டும் வகையிலும் இந்தப் பேரணி அமைந்திருந்தது.
Discussion about this post