உடுமலை அருகே 11-ஆவது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானை குடிக்க நீர் கிடைக்காததால், கரும்பு காட்டில் இருந்த குடிநீர் குழாயை உடைத்து தள்ளியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிபுத்தூர் கிராமத்தில் உள்ள வாழைத்தோப்பில் சின்னதம்பி யானை தற்போது தஞ்சம் அடைந்திருக்கிறது. அப்பகுதியில் நீர் தேடி அலைந்துவந்த சின்னதம்பி யானை, நீர் கிடைக்காத விரக்தியில் அங்குள்ள குழாயை உடைத்து சேதப்படுத்தியது. பின், அதிலிருந்து வெளியேறிய நீரை அருந்திய பிறகு அங்கேயே முகாமிட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற யானை வரவழைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கும்கி யானை மாரியப்பனுக்குப் பதிலாக சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post