சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தலில், பி.சி ஸ்ரீராம் தலைவராகவும், கார்த்திக் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆயிரத்து 300 உறுப்பினர்களைக் கொண்ட ஒளிப்பதிவாளர் சங்கத்தின், தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவுப்படி, பாடலாசிரியர் பிறைசூடன் மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றினார். எதிர் அணியிலிருந்த ஒன்பது பேரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். எனினும், சங்கத்தின் விதிமுறைகள் இடம் கொடுக்காததால் தேர்தல் நடத்தி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Discussion about this post