சிதம்பரத்தில் சினிமா தியேட்டரை, அமமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள வடுகநாதன் தியேட்டரில், குமராட்சி ஒன்றிய அமமுக செயலாளர் மில்லர் என்பவர் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அமமுக நிர்வாகி மில்லருக்கும், தியேட்டர் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மில்லர் அமமுகவை சேர்ந்த 12 பேரை அழைத்துக் கொண்டு, தியேட்டர் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது தியேட்டரையும் அவர்கள் அடித்து நொறுக்கினார். அமமுகவினர் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி-யில் பதிவானது. தற்போது இந்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுகவினரின் இந்த தாக்குதலில் தியேட்டர் ஊழியர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அமமுக நிர்வாகி மில்லர் உட்பட அந்த கட்சியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மற்ற 7 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அட்டூழியத்தில் ஈடுபட்ட அமமுகவினரை கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Discussion about this post