நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையிலுள்ள முக்கிய தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்தும், அங்கு நடக்கக்கூடிய வழிபாடுகள்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள முக்கிய தேவாலயங்களான சாந்தோம், புனித தோமையார் பேராலயம், பெசன்ட் நகர் புனித வேளாங்கண்ணி மாதா திருச்சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண மயத்துடன் காட்சியளித்தது.
இந்நிலையில் புனித தோமையர் ஆலயத்தில் குழுமியிருந்த ஏராளமான மக்களுக்கு மத்தியில் குழந்தை இயேசு கொண்டு வரப்பட்டு பேராலயத்தில் அமைக்கப்படிருந்த குடிலில் வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்தனை செய்தனர். பின்னர் சரியாக இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டு, வாணவெடிகள் வெடிக்கப்பட்டது. அப்போது அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர். பிறகு பேராயர் அந்தோனி சாமி கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் வழங்கினார்.
Discussion about this post