திருவண்ணாமலையில், நாடாளுமன்ற தேர்தலும் சித்ரா பவுர்ணமியும் ஒரே நாளில் வருவதையொட்டி காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 18ம் தேதி சித்ரா பௌர்ணமி விமரிசையாக நடைபெற உள்ளது. அதே நாளில் தேர்தலும் நடைபெற இருப்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், தேர்தலின் போது வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்தும், சிறப்பு கூடுதல் காவல்துறை தலைவர் விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் நாகராஜன், கூடுதல் காவல்துறை இயக்குனர்கள் வனிதா சந்தோஷ் குமார் மற்றும் தேன்மொழி ஆகியோருடன் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post