15 நாட்களாக ஊருக்குள்ளும் வயல்வெளியிலும் போக்கு காட்டி வந்த சின்னத்தம்பி யானை இன்று பெரும் முயற்சிக்கு பிறகு பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்துள்ள கண்ணாடிபுத்தூரில் முகாமிட்டிருந்த சின்னத்தம்பி யானையை பிடிக்க இன்று இரண்டாவது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலீம் மற்றும் சுயம்பு ஆகிய கும்கி யானைகள் உதவியுடன் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்திய பின்னரும் சின்னத்தம்பி யானை கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. இதையடுத்து கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த வனத்துறையினர் அதனை கும்கி யானை உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். காலை 7 மணியில் இருந்து விடாது நடைபெற்ற இந்த முயற்சிக்கு மதியம் இரண்டு மணி அளவில் நல்ல பலன் கிடைத்தது. தயாராக இருந்த லாரியில் சின்னத்தம்பி யானையை ஏற்றும் போதும் ஏற மறுத்து அடம் பிடித்தது.
Discussion about this post