உடுமலை கண்ணாடிப்புத்தூரில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் தடாகம் பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்தியால் காட்டு யானையை வனத்துறையினர் டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் விட்டிருந்தனர். இந்தநிலையில் அங்கிருந்து தப்பிய சின்னத்தம்பி யானை உடுமலை கண்ணாடிப்புத்தூரில் தங்கியது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் பிடித்து, வரகளியாறு முகாமில் மரக்கூண்டில் அடைத்தனர். அங்கு, சின்னதம்பி யானைக்கு பயிற்சியளிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என கூறப்படுகிறது.
Discussion about this post