மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீன வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். சீனாவை சேர்ந்த ஜூ ஹாங் சென் என்பவர் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த சம்பூர்ணராவிடம் மிளகாய் வற்றல் வாங்கி சீனாவில் விற்பனை செய்து வந்துள்ளார். வியாபாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் சம்பூர்ணராவ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் சிறைக்கு சென்ற சீனா வியாபரியின் பாஸ்போர்ட் காலாவதியானது.
இதையடுத்து போலி பாஸ்போர்ட் தயார் செய்து, இலங்கை செல்லவதற்காக சீன வியாபாரி மதுரை விமான நிலையம் வந்துள்ளார். அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்தது போலி பாஸ்போர்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
Discussion about this post