அமெரிக்க வான் வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து உளவு பார்த்த சீன பலூனை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து அட்லாண்டிக் கடலில் விழுந்த பலூனின் உதிரிபாகங்கள் மற்றும் கருவிகளை மீட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் 40 நாடுகளின் தூதர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதில் இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ராணுவ சொத்துகள் குறித்த விவரங்களை, சீன உளவு பலூன்கள் பல ஆண்டுகளாகவே உளவு பார்த்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்க விமான படையினர் போர் விமானங்களை கொண்டு சீன உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தும் மற்றுமொரு காட்சிகள் வெளியாகி உள்ளன.
Discussion about this post