லடாக் எல்லைப் பகுதியில், இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும் மோதலும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகும் லாடக் எல்லை பதற்றம் நீடித்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் தணிந்தது. இதன் காரணமாக, கிழக்கு லடக்கின் கால்வாய் பள்ளத்தாக்கில் சீனப் படைகள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கி உள்ளதாகவும், இதேபோல் இந்திய ராணுவமும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் வரும் 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இது சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post