தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜி-சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து, லாங் மார்ச் 3B என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சீன நேரப்படி நேற்றிரவு 11 மணி 21 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை சுமந்து சென்றுள்ள லாங் மார்ச்- 3B ராக்கெட், லாங் மார்ச் ராக்கெட் வரிசையில், 315ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விண்ணில் ஏவப்பட்டு, அதற்குரிய சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், அதிவேக தகவல்தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version