இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு இந்தியாவும் சம்மதித்த நிலையில், காஷ்மீரின் காவல்துறை அதிகாரிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திக் கொன்றனர். இந்த செய்தியை கேட்டு அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.
இந்தநிலையில், அரசு முறைப் பயணமாக இம்ரான்கான் சீனா சென்றுள்ளார். அங்கு இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானிற்கு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றிற்கும் பாகிஸ்தானிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post