சீனா, ரஷ்யா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 22-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காணொலி மூலம் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், மூன்று நாடுகளுக்கு இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளன. இந்திய – சீன எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால், பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும், எல்லைப் பிரச்சனையை இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா ஏற்கனவே கூறியுள்ளதால், இந்த விவகாரம் குறித்து, பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த போச்சுவார்த்தையின் போது, கொரோனா குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மார்ச் மாதம் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை, கொரோனா பரவல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post