நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய இது வரை எந்த நாடும் ரோவர் விண்கலத்தை அனுப்பவில்லை.
2018-ஆம் ஆண்டில் புதிய லூனார் ரோவர் ஒன்றை நிலவின் மறுப்பக்கத்திற்கு அனுப்ப போவதாக சீனா அறிவித்திருந்தது. அதன்படி, சேஞ்ச்-4 லூனார் ரோவர் இன்று அதிகாலை 2.23 மணிக்கு, தெற்கு சீனாவில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் மூலம் நிலா குறித்த அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யலாம் என சீனா தெரிவித்துள்ளது.
Discussion about this post