கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று 190க்கும் மேற்பட்ட நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீனா ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மற்ற நாடுகளுக்கு உதவ சீன முன்வந்துள்ளது. முதல் கட்டமாக கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.
ஸ்பெயின் நாட்டில் இதுவரை 87,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,716 பேர் உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post