சீனாவில் குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையை ஒழித்த பின்னர் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
சீனா என்றாலே “china piece” நினைவிற்கு வரும் அடுத்து அங்கு உள்ள மக்கள் தொகை பெருக்கம். இதனை உறுதி செய்யும் விதமாக 18 மாதத்தில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
சீனாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த 1979 – ம் ஆண்டு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை அந்நாட்டு அரசு பிறப்பித்ததையடுத்து இளையோரின் எண்ணிக்கை விகிதம் குறைந்து காணப்பட்டது. இதனால் அந்நாட்டில் மனிதவளம் குறைந்து வருவதாகவும் , பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சீன அரசு 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இந்நிலையில் 18 மாதங்களில் சீனாவில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பது அதிகம் என்றாலும் , சீன நாடு மனித வளத்தை இழக்காமல் இருக்க ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பை அரசு எதிர்பார்க்கிறது.
Discussion about this post