உலகளவில் சிறுவயதில் இதயநோயால் பாதிக்கப்படுவோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 29 ம் தேதி அன்று உலக இதய தினமானது, சுகாதார ஆய்வு நிறுவனத்தால் கடைபிடிக்கப்படுகிறது.
இதய நோய், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும், தற்போது சில வருடங்களாக சிறுவயதினருக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் இதய நோய் சிகிச்சை மூத்த நிபுணர் நாராயணசாமி. இதய நோய் வருவதற்கு முறையான உடற்பயிற்சி இல்லாது, அதிக மன அழுத்தம் ஏற்படுவது போன்ற காரணங்கள் ஒரு புறம் என்றாலும், முறையான உணவு பழக்கம் இல்லாதது மற்றொறு முக்கிய காரணமாம்.
நங்கு வளர்ந்த வெளிநாடுகளில் உள்ளவர்கள், தினந்தோறும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் அங்கு இதய நோயால் பாதிக்கக்கபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. ஆனால், இந்தியாவிலோ, சிறுவயதிலேயே அதிகம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் அளிப்பது இதயம் தான். அவ்வளவு, முக்கியமான ஒரு உடல் உறுப்பை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? சீரான இதய துடிப்புக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
விளக்குகிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் பரத்குமார். எந்த வயதினராக இருந்தாலும் சரி, அனுதினமும் முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இதயநோய் ஏற்படுவதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்…
Discussion about this post