ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கொல்லிமலை வாழவந்திநாடு ஆரம்ப சுகாதாரநிலைய ஓட்டுநர் முருகேசனிடம் நடத்தி விசாரணையில், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து, குழந்தைகளை கடத்தி விற்றதாக திருச்செங்கோடு, குமாரப்பாளையம், பவானி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையின் தற்காலிக ஊழியர் உட்பட 2 பேரை கோவைக்கு அழைத்து சென்று ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post