கன்னியாகுமரி அருகே கடன் பிரச்சனையில் 4 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ் – சகாய சிந்துஜா தம்பதி. இவர்களுக்கு ரெய்னா என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரிடம் சகாய சிந்துஜா ஒருலட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்துவதில், சிந்துஜாவுக்கும், அந்தோணிசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாகவும், தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர் .
Discussion about this post