கட்டுப்பாடுகள் கடுமையாகுமா? தலைமை செயலாளர் நாளை மீண்டும் ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்துகிறார். கட்டுப்பாடுகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version