6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு

ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேம்பாட்டு இயக்குநராக அமுதவல்லியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குநராக மதிவானனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் கழக உறுப்பினர் மற்றும் செயலாளராக கார்த்திகேயனும், கடல்சார் வாணிப கழகத்தின் தலைவராக சம்பத்தையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரமைப்பு திட்டமிடல் இயக்குநராக சந்திர சேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version