முதல் முறையாக தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கிழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனையொட்டி நவம்பர் 1ஆம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.
காமராஜர் சாலையில் உள்ள தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக நுழைவு வாயிலில் தமிழகத்தின் வரைபடம் வண்ண விளக்குகளால் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தினத்தையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.