இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில், கொரோனா தடுப்புப் பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள், அத்திக்கடவு – அவிநாசி நீரேற்று திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாசி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து வளங்களும் கொண்ட கோவை மாவட்டத்தில், அரசு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post