கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த, பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு நிறைவேற்றி வரும் விவசாய நலத்திட்டங்களை பட்டியலிட்டார். காண்டூர் கால்வாய் சீரமைப்பதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அதைதொடர்ந்து, உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியபட்டி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்றார்.
Discussion about this post