காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்டதற்காக 10 அதிகாரிகளுக்கும் புலனாய்வு பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக 6 அதிகாரிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்க உள்ளார். விருது பெறும் அதிகாரிகளுக்கு 8 கிராம் அளவுள்ள தங்கப்பதக்கமும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
Discussion about this post