பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் கோரிக்கை பற்றி முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் செயல்படும் தற்காலிகமாக காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க நடைபாதையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோபிசெட்டிபாளையத்திலிருந்து பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post