சேலம் மாவட்டத்தில் நிறைவடைந்த 17 திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி, நைனாம்பட்டி பகுதியில் நடைபெற்று நிகழ்ச்சியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இணைப்பு பாலம், எடப்பாடியில் அமைக்கப்பட்ட புதிய கருவூல அலுவலக கட்டடம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 13 திட்டப்பணிகள் உள்ளிட்ட 17 திட்டப் பணிகளை 5 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதிமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சேலம மாவட்டத்தில் செயல்படுத்தபட்ட திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
இதையடுத்து சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இணைப்பு பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி, நடந்து சென்று பாலத்தை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடியில் அமைக்கப்பட்ட புதிய கருவூல அலுவலக கட்டடத்தையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
Discussion about this post