தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அடுத்த சட்டமன்ற தொடருக்கு பின் முதலமைச்சர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.சி.சம்பத், சீன அதிபர் தமிழகம் வந்த பிறகு சீனாவின் பார்வை தமிழகத்தை நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அடுத்த சட்டமன்ற தொடருக்கு பின் முதலமைச்சர் சீனா பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடியில், பெட்ரோலியம் சார்ந்த தொழிற்சாலை வரவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Discussion about this post