முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வார் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கணபதிநகர், கைனூர் பகுதிகளில், 9ம் தேதி காலை 10.30 மணிக்கு, தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர், சோளிங்கர் தொகுதியில், பாண்டியநல்லூர், சோளிங்கர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட கந்தநேரியில், மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட சென்றாம்பள்ளியில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் முதலமைச்சர், இறுதியாக வேலூரில் அண்ணா கலையரங்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து 10ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Discussion about this post