சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.
சென்னை கிண்டியில் கிங் ஆய்வகத்துக்கு அருகே அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையக் கட்டடமானது 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 750 படுக்கைகளும், அவற்றில் 300-க்கும் மேற்பட்டவற்றில் பிராணவாயு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 70 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்க உள்ளார்.
Discussion about this post