திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டப்பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்றார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 208 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், 20 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாயிரத்து 800 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Discussion about this post