திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
காலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் காலை சந்தையில் மக்களையும் வணிகர்களையும் நேரில் சந்திக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சோமரசம்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும், மணப்பாறை பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கிறார்.
பின்னர் காவக்காரன்பட்டியில், அதிமுக நிர்வாகிகளுடனும், மகளிர் சுய உதவிக் குழுவினரோடும் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். மாலை 3 மணியளவில், திருவெறும்பூரில் சிறு, குறு மற்றும் சார்புநிலை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சியில் வட்டாரப் பிரமுகர்களையும், வணிகர் பிரதிநிதிகளையும் சந்திக்கும் முதலமைச்சர், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கும் அவர், பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடுகிறார். இறுதியாக நாதர்வாளி தர்காவில் வழிபடும் முதலமைச்சர், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
Discussion about this post